BREAKING

BREAKING NEWS பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு யாரையும் தேர்வு எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை தேர்வு வேண்டுமென்பதும் நம்முடைய நிலைப்பாடு அல்ல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பணியில் இருப்பவர்கள் பணியில் இல்லாதவர்கள் தகுதி தேர்வு எழுத விண்ணப்பிக்கிறார்கள் விண்ணப்பிப்பவர்கள் இணையதளம் முடங்கியதால் கால அவகாசம் கேட்கிறார்கள். அதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம் யாரையும் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக இந்த கோரிக்கை வைக்கவில்லை. கோரிக்கையை தெளிவாக படித்து புரிந்து கொள்ளுங்கள் கோரிக்கையை தவறாக புரிந்து கொண்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் தமிழ்நாட்டுக்கான பிரச்சனை இல்ல அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய அரசு பள்ளி /அரசு உதவி பெறும் பள்ளி/ மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களின் பிரச்சினை அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் பணியில் இருக்கும் எந்த ஒரு ஆசிரியருக்கு கூட கடுகளவு பாதிப்பு ஏற்படாது இதை அரசும் அமைச்சரும் தெளிவாக தெரிவித்துள்ளார்கள் இது சட்ட ரீதியான பிரச்சனை உச்ச நீதிமன்றம் அமர்வு அளித்துள்ள தீர்ப்பு அதை சட்டரீதியாக நுணுக்கமாக அணுக வேண்டியுள்ளது. அவரவர் விருப்பத்திற்கும் அவரவருடைய எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட இயலாது ஆகவே அதை புரிந்து கொண்டு செயல்படுவது தான் சரியாக இருக்கும் வாட்ஸ் அப்பில் வரக்கூடிய செய்திகளை பார்த்து ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்குவதும் அனைவரையும் பாதுகாப்பதுவுமே இயக்கத்தின் கடமை

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் டெட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

Friday, 18 January 2019

ஜாக்டோ ஜீயோபோராட்டம் குறித்து மாநில பொதுச் செயலாளர் அவர்களின் விளக்கம்

📌📌📌📌📌📌📌📌📌
_இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் மாநில அமைப்பின் போராட்ட வாழ்த்துகள்_

🎯 ஜாக்டோ ஜியோ வின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வருகிற ஜனவரி 22ஆம் தேதி முதல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🎯 ஜாக்டோ ஜியோ இன்றுவரை   ஏழு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வருகிறது. *பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யப்படவேண்டும் என்ற நம்முடை கோரிக்கை இதில் முதன்மை கோரிக்கையாக உள்ளது*

🎯 *இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்டம் முழுவதும் நடைபெறுவதாக உள்ள ஆர்ப்பாட்டங்கள் முழுக்க முழுக்க 2 கோரிக்கைகள் தொடர்பானது.*
-----------------------------------
1.3500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும்.               

 2. அங்கன்வாடி மையங்களில் LKG/UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்க பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.  
-----------------------------------
🎯இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்தப்படும் போராட்டம் குறித்து,வாட்ஸ் அப் குழுக்களில் நமது பொறுப்பாளர்கள் பகிர்ந்து வரும் பல்வேறு செய்திகள் வலம் வருகிறது. சில கருத்துகளை அனைவரும் புரிந்து கொள்ளவே..இந்த செய்தி

🎯உங்களுடைய பல்வேறு கருத்துகள் நியாயமானவை. நாம் தொடக்க கல்வித் துறையில் நியமனம் செய்யப்பட்ட போது, 3-5 வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று, நாம் பல்வேறு அச்சுறுத்தலுக்கு உள்ளானோம். வேண்டுமென்றே இதுபோன்ற சூழலில் நம் மீது திணிக்கவும் செய்தார்கள். ஆனால் நமக்கு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதை சட்டரீதியாக எதிர்கொண்டோம். *இன்று ஏறக்குறைய 99% அந்த நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு உள்ளது.*

🎯 இன்று நம்முடைய தோழர்கள் பல்வேறு இடங்களில் தலைமை ஆசிரியர்களாகவும் பொறுப் பேற்றிருக்கிறார்கள்.
🎯பொங்கல் போனஸ் பறிக்கப்பட்டபோது, யாரும் குரல் எழுப்ப வில்லை என்பது உண்மைதான். ஆனால் தற்போது நம்முடன் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளார்கள். *இவ்வளவு முரண்பாடுகள் நமக்கு அவர்களோடு இருந்தாலும், சக ஆசிரியர் என்ற முறையில் அவர்களுக்கான அநீதிகளுக்கு நாம் குரல் கொடுத்து வருகிறோம்.*

🎯  *அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன போராட்டத்தில், அரசு ஆசிரியர்கள் மீது இதுபோன்ற அடக்கு முறைகளை ஏவுகிறபோது போது, சக ஆசிரியர்கள் என்ற முறையில் கண்டிக்க வேண்டியது கடமை நமக்கு உள்ளது.*

🎯 *_நாம் காட்டிக் கொடுப்பவர்கள் அல்ல உரிமைக்காகப் போராடுபவர்கள் என்பதை வரலாறு பதிவு செய்யும்._*

🎯 அங்கன்வாடி வகுப்புகளுக்கு, தொடக்கப் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை நியமிக்க போகிறார்கள் என்பதை முதன்முதலில் தமிழக ஆசிரியர் பெருமக்களுக்கு சொன்னது நம்முடைய அமைப்பு தான். டிசம்பர் மாதம் 18ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் இதை எதிர்த்து மாநில பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னுடைய பேட்டி ஒளிபரப்பானது என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அப்போது இல்லை என்று மறுத்தவர்கள், இடைநிலை ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் இப்போதுதான் விழித்திருக்கிறார்கள்.

🎯 நண்பர்களே நம்முடைய கோபம் நியாயமானது என்றாலும்,  நம்முடைய ஆசிரியர் சமூகத்தின் ஒரு பிரிவினர் மீது அரசு முறையான அரசாணையும் முறையான திட்டமிடுதலும் இல்லாமல் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கிறபோது, நாம் அதற்கான எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.

🎯 இன்று நடைபெறக்கூடிய போராட்டம் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவில் விவாதிக்கப்படாமல், அவசர சூழல் கருதி ஒருங்கிணைப்பாளர்களால் எடுக்கப்பட்டுள்ளது.

🎯 இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு இடைநிலை ஆசிரியர் அமைப்புகளும் தனித்தனியாக நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்கள். ஆகவே _இவை அனைத்தையும் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ள மாநில உயர்மட்டக் கூட்டத்தில் நான் தெளிவாக விளக்க இருக்கிறேன்._

🎯  *மேலும் பணி நீட்டிப்பு, (மறுநிர்ணயம் ) தற்போது இரத்து  செய்யப்பட்டுள்ளது*. ஆனால் அது எந்த கோரிக்கைகளிலும் இடம்பெறாமல் உள்ளது. இதையும் ஜாக்டோ ஜியோவில் வலியுறுத்துவோம்.

🎯  இன்றையஇரண்டு கோரிக்கைகளும், ஏற்கனவே உள்ள ஏழு கோரிக்கைகளோடு சேர்த்து ஒன்பது கோரிக்கைகளாக மாற்ற ஜாக்டோ ஜியோ முடிவெடுத்துள்ளதாக அறிய வருகிறது. 

🎯 *ஆகவே இன்று நடைபெறக்கூடிய போராட்டம், இந்த இரு கோரிக்கைகளுக்காக மட்டுமே. நம்முடைய சக ஆசிரியர்களுக்கு   பாதிப்பில் நானும் பங்குகொள்கிறேன், அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையும், சக ஆசிரியர்கள் பால் நேசமும் உள்ள தோழர்கள் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்*. வர இயலாதவர்கள் வழக்கம்போல் வீட்டில் இருந்து கொண்டு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். 

🎯 *அனைவரும் 22ஆம் தேதி முதல் நடைபெறக்கூடிய, ஜாக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுங்கள்* 

🎯நம்முடைய ஜீவாதார பிரச்சனையான, பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கோரிக்கை நீர்த்து போவதற்கு நமது அமைப்பு எப்போதும் துணை போகாது. மாநில அமைப்பின் வழிகாட்டுதல் எப்போதும் சரியான பாதையை நோக்கியே..
-----------------------------------
இயக்கத்  பொறுப்பாளர்கள், 

வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிடும்போது, கோரிக்கைகள்  குறித்த  விளக்கங்களை மாநில அமைப்பிடம் கேட்டுப் பெற்று, பிறகு பதிவிடுங்கள்.

*யார் எதிர்கருத்தினை பதிவு செய்தாலும், சிலர் அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்தும் மன நிலையில் உள்ளார்கள்*.அவர்களில் சிலர் எந்த போராட்டத்திற்கும் வராதவர்கள். இது உறுப்பினர்கள் இடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். 

விளக்கம் தேவைப்படுவோர் மாநில பொறுப்பாளர்களின் தொடர்புகொண்டு விளக்கங்கள் பெற்றுக்கொண்டு பதிவிடவும்.
*************************
*மாநில மையம்_ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
💐💐💐💐💐💐💐💐💐💐

*ஜாக்டோ -ஜியோ கோரிக்கைகள்*
-----------------------------

1. பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்.

2. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

3. உயர்நிலை த.ஆ, முதுகலை ஆசிரியர்கள் அமைச்சு பணியாளர்கள் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும்.

4.அங்கன்வாடி, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

5. 21 மாத ஊதிய நிலுவை வழங்க வேண்டும்.

6. 2003-2004 தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிவரண்முறை செய்ய செய்ய வேண்டும்.

7. அரசாணை எண்.56, 100, 101 முற்றிலும் இரத்து செய்யவேண்டும், 5000 பள்ளிகள் மூடப்படும் என்ற கொள்கையை இரத்து செய்ய வேண்டும்

No comments:

QR CODE GENARETOR

9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUST Examination)அறிவிப்பு வெளியீடு!!!

9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUST Examination)அறிவிப்பு வெளியீடு!!! Trust Exam Notification ஊடகப்பிரிவு ...

Nmms class

https://linktr.ee/solliadi