*JOINT FORUM FOR MOVEMENT ON EDUCATION (JFME)*
*(கல்விக்கான இயக்கங்களின் கூட்டமைப்பு)*
*02.10.2020*
* தோழர்களே!வணக்கம்.*
*11.09.20. நடைபெற்ற JFME (JOINT FORUM FOR MOVEMENT ON EDUCATION)தமிழ்நாடு மாநில அளவிலான கூட்டத்தில் சங்கங்கள் முடிவின்படி தேசிய கல்வி கொள்கை 2020 தொடர்பாக மாநில அளவிலான இணையவழிக் கருத்தரங்கம் 04.10.2020 ஞாயிறு முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறுகிறது.*
*இக்கருத்தரங்கில் தேசிய கல்விக் கொள்கை 2020 தொடர்பாகத் தனித்தனித் தலைப்புக்களில் தமிழகத்தின் புகழ்பெற்ற கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக அக்கறை கொண்ட பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகின்றனர்.*
*இக்கருத்தரங்கில் JFMEல் இணைந்துள்ள இயக்கங்களின் சார்பில் ஆயிரக்கணக்கான இயக்கத் தோழர்களைப் பங்கேற்கச் செய்திட வேண்டும்.இந்தப் பொதுமுடக்கக் காலத்தில் வீட்டில் இருந்தபடியே சிறந்த சிந்தனையாளர்களின் கருத்துக்களைக் கேட்பதற்கு ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை நாம் இயக்கத் தோழர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்வதை நாம் உறுதி செய்திட வேண்டும்.*
*கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான YouTube link கீழே கொடுக்கபட்டுள்ளது.Linkஐ Click செய்தால் நேரடியாக YouTubeக்குச் சென்று நிகழ்ச்சியில் எளிதாக இணைத்துவிடலாம்.
Link:
*எனவே, JFME இணைப்புச் சங்கங்களின் மாநில அளவிலான நிர்வாகிகள் இச்செய்தியை அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்வு செய்து தங்கள் இயக்கத் தோழர்களின் பங்கேற்பை உறுதி செய்திட JFME தமிழ்நாடு கிளை தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*
*கருத்தரங்கம் வெற்றிபெற இமைப்பொழுதும் சோராது உழைத்திட JFME மாநிலக் குழு உறுப்பினர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:
Post a Comment