📌📌📌📌📌📌📌📌📌
வட்டார கல்வி அலுவலர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
வணக்கம்.
புயல் பாதிப்புகளால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நவம்பர் 26 ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்தை முன்னிட்டு ,தலைமைச் செயலாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அரசு அலுவலகங்கள் தினமும் செயல்படுவதால், வராதவர்கள் விவரங்களை அரசுக்கு அனுப்ப கேட்டுள்ளார்.
பள்ளிகளில் தினந்தோறும் அனைத்து ஆசிரியர்களும் வருவதில்லை . சுழற்சி முறையில் பணியாற்ற அரசு அனுமதித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயலர்/ இயக்குனர்களிடம் இருந்து எவ்வித உத்தரவும் வராத நிலையில், புயல் கால சூழலில், *பல்வேறு தலைமையாசிரியர்கள் 26 ஆம் தேதி அனைத்து ஆசிரியர்களுக்கும் வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி கொண்டிருக்கிறார்கள்*.
கால நிலை, அரசாணையில் சொல்லப்பட்ட அறிவுரைகளை தெளிவாகப் புரிந்துகொண்டு தலைமை ஆசிரியர்கள் செயல்பட கேட்டுக் கொள்கிறோம்.
பள்ளிக்கல்வித்துறை செயலர்/ இயக்குநரும் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று தெரிவித்தால் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர தயாராக உள்ளார்கள்.
இப்படிப்பட்ட புயல் காலத்தில் ,அரசு விடுமுறை அளித்துள்ள சூழ்நிலையில் ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
புயல் காலத்தில்,அரசு தெரிவிக்காத எந்த உத்தரவையும், ஆசிரியர்கள் மீது திணிக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்
➖➖➖➖➖➖➖➖➖
பொதுச் செயலாளர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
➖➖➖➖➖➖➖➖➖
No comments:
Post a Comment