BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Sunday, 7 February 2021

*ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு வணக்கம்.* *பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் மாலைநேர ஆர்பாட்டம் தொடர்பாக பெரும்பாலான மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடைபெற்று இயக்கத்தினை மிக எழுச்சியாக நடத்த முடிவெடு�

*ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு வணக்கம்.*

*பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் மாலைநேர ஆர்பாட்டம் தொடர்பாக பெரும்பாலான மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடைபெற்று இயக்கத்தினை மிக எழுச்சியாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.*

*நேற்றைய தினம் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்த இயலாத மாவட்டங்களில் இன்று கூட்டங்களை நடத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*

*மேலும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய நிர்ணய அநீதி உட்பட ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகள்  அனைத்தையும் வென்றெடுக்க தொடர்ந்து ஜாக்டோ ஜியோ போராட்ட இயக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்.*

*எந்தவொரு இயக்க நடவடிக்கைகளை ஜாக்டோ ஜியோ மாநில அமைப்பு அறிவித்தாலும், அதனை மிக சக்தியாகவும் எழுச்சியாகவும் செயல்படுத்தி இயக்கங்களை வெற்றி பெறச் செய்து கொண்டிருப்பது மாவட்ட ஒருங்கிணைப்பே.  தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் நாம் திட்டமிட்ட இயக்கத்தை பேரெழுச்சியுடன் முன்னெடுத்து, கோரிக்கைகள் அனைத்தையும் வெல்வதற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*

*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*
*ஜாக்டோ ஜியோ*

No comments:

QR CODE GENARETOR

Photo from 𝙴𝙻𝙰𝙽 𝚅𝙸𝙹𝙰𝚈𝙰𝙽

*NHIS மாவட்ட வாரியாக நோடல் அதிகாரி தொடர்பு எண்கள்.*☝️☝️☝️ 

Nmms class

https://linktr.ee/solliadi