ஜாக்டோ ஜியோவின் முதன்மை கோரிக்கையான cps, உள்ளிட்ட ஜாக்டடோ ஜியோவின் பரந்துபட்ட ஒற்றுமையினைக் கட்டிக் காக்கும் விதமாக, பழைய ஓய்வூதியம், சரண் விடுப்பு ஆகிய பொதுவான கோரிக்கைகளை விலக்கிக் கொள்ளுமாறு ஒருங்கினைப்பாளர் வெங்கடேசன் வேண்டுகோள்
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டிட்டோ ஜாக் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுக்கு வணக்கம்.
தொடக்கக் கல்வித் துறையில் உள்ள ஆசிரியர்களுக்கு முற்றிலும் கேடு விளைவிக்கும் அரசாணை 243ஐ இரத்து செய்திட வேண்டும் என்ன கோரிக்கையை ஜாக்டோ ஜியோவின் கோரிக்கையாக சேர்க்க வேண்டும் என்று டிட்டோ ஜாக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஏனைய சில ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அரசாணை 243 மூலமாக பலன் கிடைக்கும் என்ற போதிலும், அவர்களையும் ஒற்றுமைப்படுத்தி, டிட்டோ ஜாக் கோரிக்கையை ஏற்று, அரசாணை 243 இரத்து என்பதை ஜாக்டோ ஜியோவின் கோரிக்கையாக ஒருமனதாக இணைந்தோம்.
ஆனால், 243 இதுகாறும் இரத்து செய்யப்படவில்லை என்பதோடு, நடைமுறைக்கு வந்து விட்டது. இதனால், டிட்டோ ஜாக் அமைப்பு உறுப்பினர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, டிட்டோ ஜாக் பல்வேறு கட்ட போராட்ட இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தங்களது வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க போராட்ட களம் காணும் டிட்டோ ஜாக் அமைப்பிற்கு வாழ்த்துக்கள்.
ஆனால், டிட்டோ ஜாக் 31 அம்சக் கோரிக்கைகளில், சிபிஎஸ் ஒழிப்பு, சரண்டர் மீளப் பெறுதல் ஆகியவை இடம் பெற்றுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. டிட்டோ ஜாக் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று, 243 மூலமாக பயன் பெறும் அமைப்புக்கள் இருந்தாலும், 243 இரத்து என்ற கோரிக்கையை ஜாக்டோ ஜியோவில் இணைத்ததற்கு முரணாக, பழைய ஓய்வூதியத்தியம், சரண் விடுப்பு ஆகியவை டிட்டோஜாக் கோரிக்கையாக சேர்க்கப்பட்டுள்ளது என்பது, 2017 முதல் நமது உரிமைகளுக்காக களம் காணும் ஜாக்டோ ஜியோவின் ஒற்றுமையை குலைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எனவே, உரிமை மீட்பில் களம் கண்டுள்ள டிட்டோ ஜாக் அமைபப்பினர், ஜாக்டோ ஜியோவின் பரந்துபட்ட ஒற்றுமையினைக் கட்டிக் காக்கும் விதமாக, பழைய ஓய்வூதியம், சரண் விடுப்பு ஆகிய பொதுவான கோரிக்கைகளை விலக்கிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment