BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Wednesday, 31 July 2024

தேன் கூட்டை கலைக்கும் டிட்டோஜாக்*

*தேன் கூட்டை கலைக்கும் டிட்டோஜாக்*
➖➖➖➖➖➖➖➖
ஜாக்டோ ஜியோ எனும் மிகப்பெரிய வலுவான கூட்டமைப்பு தமிழ்நாட்டில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான சிபிஎஸ் ஒழிப்பு, சரண்டர் ஒப்படைப்பு முடக்கம், ஊக்க ஊதிய உயர்வு, 18 மாத கால அகவிலைப்படி ,21 மாத கால ஊதியக்குழு நிலுவை போன்ற எண்ணற்ற வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரே பதாகையின் கீழ் போராடிக் கொண்டிருக்கும்போது *அரசாணை 243 ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கைக்காக மற்ற கோரிக்கைகளை பக்கவாத்தியமாக வைத்துக் கொண்டு தனி ஆவர்த்தனம் வாசிக்கிறது டிட்டோஜாக்.*

தனிச்சங்க கோரிக்கைகள் எதுவும் ஜாக்டோ ஜியோ வில் கடந்த ஆண்டு வரை சேர்க்கப்படவில்லை டிட்டோஜாக்கின் பிடிவாதத்தால், அச்சுறுத்தலால் அரசாணை எண் 243 ரத்து என்ற கோரிக்கை ஜாக்டோ ஜியோவில் கடந்த ஆண்டு இடம்பெற்றது.

ஒற்றைக் கோரிக்கையான சிபிஎஸ் ஒழிப்பு எனும் வாழ்வாதாரக் கோரிக்கையை முன் நிறுத்தாமல் அரசாணை எண் 243 ரத்தை முன்னிறுத்தி ஒப்புக்கு சப்பானியாய் ஓராயிரம் கோரிக்கைகளை முன்னிறுத்தும் நாடகக் கூட்டங்கள் மூன்று ஆண்டு காலமாக கும்பகர்ணக் கூட்டமாக இருந்து வந்தது ஏன்? 

கடந்த டிசம்பர் 2023 இல் இருந்து அரசாணை ரத்து என்ற கோரிக்கையைத் தவிர இவர்கள் வேறு எந்த வார்த்தைகளையும் உச்சரிப்பதே இல்லை.

 பட்டதாரி ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கனவான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை எதிர்ப்பவர்கள் பட்டதாரிகளின் குரல்வளையை நசுக்கும் இவர்கள் பட்டதாரி ஆசிரியர்களின் உரிமையை பறிக்கும் இவர்கள் ஜனநாயகம் என்ற வார்த்தையை உச்சரிப்பது அபத்தம். 

மாநில முன்னுரிமை பிரச்சினையா? ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியலில் பழையபடி இடம்பெற முடியாதது பிரச்சனையா? ஒன்றிய முன்னுரிமை பிரச்சனையா?

டிட்டோஜாக்கிற்கு இருக்கும் ஒரே கோரிக்கை அரசாணை ரத்து ஒன்றே. மற்ற கோரிக்கைகளைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லை.ஒரு நிலையில் பணியாற்றாமல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியாமல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆவது ஒன்றே இவர்கள் லட்சியம்.

அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி பதவி உயர்வு கொடுத்தாலும் உடன்பட மாட்டார்கள்.

இதுதான் இவர்கள் அரசியல்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற அனைத்து துறைகளிலும் பணியாற்றும் பெண்கள் அனைவரும் மாநில முன்னுரிமையை பின்பற்றித் தான் பணிபுரிந்து வருகிறார்கள்.

டிடோஜாக்கில் இருக்கும் தலைவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் உண்டு.

 அவர்களை நம்பி இருக்கும் சக ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை.

 அதைப்பற்றி தலைவர்களுக்கு கவலை இல்லை.

 ஏனென்றால் தலைவர்களின் ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை மற்றும் எண்ணற்ற கோரிக்கைகளுக்காக போராடாமல் இருந்துவிட்டு இப்போது போராட்டத்தை அரசாணை ரத்து என்ற ஒரே காரணத்திற்காக மடை மாற்றுகிறது.

அரசாணை 243 வெளியிட்டதற்காக அரசை பாராட்டி நன்றி தெரிவித்து அரசை அரவணைக்கும் சங்கங்களை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் விமர்சனம் செய்பவர்கள் தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்பதை உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். 

ஜாக்டோ ஜியோ அமைப்புடன் கூடி பொதுவான கோரிக்கைகளுக்காக போராடாமல் நாங்கள்தான் போராடி அனைத்தையும் பெற்று தருவோம் என தங்களை நம்பி இருக்கும் ஆசிரியர்களை அரசாணை எதிர்ப்புக்காக விளக்கை நோக்கி வரும் வீட்டில் பூச்சிகளைப் போல வீழ்த்தாதீர்கள்.


ஊடகப்பிரிவு மற்றும் தொழில்நுட்பப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

QR CODE GENARETOR

Special TET Class by SCERT On 08/05/2026

Child devlopment and Pedagogy SCERT CLASS ON 08/06/2026 ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

Nmms class

https://linktr.ee/solliadi