தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா
தாராபுரத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட சிறப்பு பொதுக்குழு மற்றும் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா தாராபுரம் பூங்கா சாலையில் உள்ள தமிழ் கலை மற்றும் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட தலைவர் ந. சிவகுமார் தலைமை வகித்தார் தாராபுரம் வட்டார செயலாளர் ஆர் ரகு வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் பி இளங்குமரன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில துணை பொதுச் செயலாளர் சோ. சந்திரசேகரன், மாநில தலைவர் கே தங்கவேலு ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நடப்பாண்டிற்கான புதிய நிர்வாகிகள் 1. மாவட்ட செயலாளராக திரு ஜெயபாலன் அவர்கள் 2. மாவட்ட ஊடக செயலாளராக திரு மாரிமுத்து அவர்கள் 3. மாவட்ட துணை தலைவராக திரு அந்தோணி ராஜ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் முனைவர் பி. பேட்ரிக் ரெய்மாண்ட் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் பொட்டிக்கம்பாளையம் ச நீலாவதி, கெத்தல் ரேவ் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சாந்தி . என் சி பி பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சுப்பிரமணியன். சங்கராத்தாள். கெத்தல் ரேவ் அரசு உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட பொருளாளர் நா. பால்ராஜ் ஒருங்கிணைத்தார்.
மாவட்ட செயலாளர் ஜெயபாலன் நன்றி கூறினார்.


.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


No comments:
Post a Comment