தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 – சுருக்கம்
➖➖➖➖➖➖➖➖➖
முன்னுரை & நோக்கம்:
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025, சமத்துவம், சமூக நீதி, தரமான கல்வி மற்றும் எதிர்காலத் திறன்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரும் தனித்திறன், பண்பாடு, மொழி, மனிதநேயம் மற்றும் தன்னம்பிக்கையில் வளரும் வகையில், 21ஆம் நூற்றாண்டு திறன்களுடன் உலகளாவிய போட்டிக்கு ஆயத்தப்படுத்துவதே நோக்கம்.
1. சமத்துவம் & சமூக நீதி:
- சாதி, பாலினம், பொருளாதார நிலை, புவியியல், மாற்றுத்திறன் என எந்த பாகுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி வாய்ப்பு.
- பட்டியலினம், பழங்குடியினர், சிறுபான்மை, CWSN மாணவர்களுக்கு இலக்கு வைத்த உதவித் திட்டங்கள்.
- இலவச சீருடை, பாடப்புத்தகம், மதிய உணவு, விடுதி வசதி மற்றும் பாலினச் சமத்துவ முயற்சிகள்.
(சுருக்கம்: Resource Team தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு)
2. அடிப்படை எழுத்தறிவு & எண்ணறிவு (BLN):
- 3ஆம் வகுப்பு முடிவில் எல்லா மாணவர்களும் வாசித்தலும், கணிதத் திறன்களும் பெறுதல்.
- “எண்ணும் எழுத்தும்” திட்டம், வயதுக்கேற்ற மதிப்பீடு, விளையாட்டு அடிப்படையிலான கற்றல்.
- கிராமப்புறம், பழங்குடியினர் பகுதிகளில் சிறப்பு கவனம்.
3. பாடத்திட்ட மறுசீரமைப்பு & மொழிக் கொள்கை:
- மனப்பாடம் குறைப்பு, அனுபவபூர்வ கற்றல், பல்துறை கற்றல்.
- தமிழ் கற்றல் சட்டத்தின்படி பல்மொழிக் கல்வி, சமச்சீரான இருமொழிக் கொள்கை.
- தாய்மொழி வழிக் கற்பித்தல், கலாச்சார-பாரம்பரிய இணைப்பு.
4. 21ஆம் நூற்றாண்டு திறன்கள்:
- குறியீட்டு முறை (Coding), செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் கல்வியறிவு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, உலக குடியுரிமை.
- TN-SPARK திட்டம், இணைவழிக் கற்றல் (Blended Learning).
- தொழில் முனைவு, பிரச்சினை தீர்க்கும் திறன், புதுமை சிந்தனை.
5. மதிப்பீட்டு மாற்றங்கள்:
- தேர்வுகள் தண்டனை அல்ல; கற்றலுக்கான ஆதரவாக மாற்றம்.
- தொடர்ச்சியான, திறன் சார்ந்த மதிப்பீடு, சுயமதிப்பீடு, ஒப்பார்குழு மதிப்பீடு.
- 1–8 வகுப்புகளில் தேர்ச்சி/தோல்வி இல்லை; கற்றல் இடைவெளி கண்காணிப்பு.
6. ஆசிரியர் திறன் மேம்பாடு:
- பணிமுன், பணியிடப் பயிற்சி, பள்ளித் தலைமைத்துவ பயிற்சி.
- டிஜிட்டல் கற்பித்தல், சமூக-மனவளக் கற்றல் பயிற்சி.
- பின்தங்கிய பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு உதவி.
7. பாதுகாப்பான, குழந்தை மையப் பள்ளிகள்:
- உடல், மனநலம், பாலின விழிப்புணர்வு, உடற்கல்வி, வாழ்க்கைத்திறன்.
- மாணவர் மன்றம், ஆலோசனை மையம், மகிழ் முற்றம்.
- பாலியல் மற்றும் உடல் துன்புறுத்தல் தடுப்பு நடவடிக்கைகள்.
8. நிலைத்தன்மை & உள்கட்டமைப்பு:
- திறன் வகுப்பறைகள், டிஜிட்டல் கருவிகள், அறிவியல் ஆய்வகங்கள், பசுமை வளாகங்கள்.
- மழைநீர் சேகரிப்பு, சூரிய சக்தி பயன்பாடு.
- “மாதிரி பள்ளி” & “வேற்றுப் பள்ளி” முயற்சிகள்.
9. சமூக பங்கேற்பு:
- பெற்றோர், முன்னாள் மாணவர்கள், CSR நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் இணைப்பு.
- “நம்ம ஊரு நம்ம பள்ளி” திட்டம்.
- பள்ளி மேலாண்மை குழுக்கள் (SMC) வலுப்படுத்தல்.
மாணவர் வளர்ச்சிக்கான சிறப்பு முயற்சிகள்:
- முதல்வர் காலை உணவு திட்டம், தமிழ்ப்புதல்வன் & புதுமைப்பெண் உதவித்தொகை.
- நான் முதல்வன் – தொழில் திட்டமிடல், வானவில் மன்றம் – அறிவியல் & கணித மேம்பாடு.
நிதி ஒதுக்கீடு (2024–25):
- மொத்தம் ₹44,042 கோடி (மாநிலச் செலவில் 13.7%).
- உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் வளங்கள், ஆசிரியர் பயிற்சி, மாதிரி பள்ளிகள்.
- பெரிய திட்டங்கள்: பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் – ₹1,000 கோடி; திறன் வகுப்பறைகள் – ₹65 கோடி; கணினி ஆய்வக மேம்பாடு – ₹160 கோடி.
முக்கிய இலக்குகள்:
- 100% சேர்க்கை & தக்கவைத்தல் – பள்ளிவிட்டு விலகல் இல்லாமல்.
- கற்றல் இடைவெளி குறைத்தல்.
- டிஜிட்டல், தொழில் மற்றும் உலகளாவிய திறன்கள் கொண்ட மாணவர்கள் உருவாக்கம்.
- அனைத்து மாணவர்களும் பாதுகாப்பான, ஊக்கமளிக்கும் பள்ளிகளில் கற்கும் வாய்ப்பு.
No comments:
Post a Comment