அனைவருக்கும் வணக்கம் மாவட்ட பொறுப்பாளர்கள் காணொளி வழிக் கூட்டத்தில் அறிவித்தவாறு மாநில அமைப்பானது ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில் டெட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களை, அரசாணைகளை மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள் தலைமையில் மதுரையில் இன்று வழக்கறிஞரை நேரில் சந்தித்து வழங்கினார்கள். வழக்கினை நடத்துவதற்காக முதல் கட்ட தவணையாக இயக்கத்தின் சார்பில் ரூபாய் 50,000 இன்று வழக்கறிஞரிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பொறுப்பாளர்கள் பாரதி வளனரசு மற்றும் அந்தோணிசாமி உடன் இருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகளை மாநில அமைப்பு மேற்கொண்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநில மையம் TNGTF
ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:
Post a Comment