BREAKING

BREAKING NEWS BREAKING NEWS| கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து.

தினம் ஒரு திருக்குறள்

தினம் ஒரு திருக்குறள்

FLASH NEWS

FLASH NEWS இன்று இரவு 8 மணிக்கு நமது TET வகுப்புகள் துவங்க இருக்கின்றன... இன்றைய வகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனில் நேரலையாக நடைபெறும்... https://youtube.com/@tamiltuber.?si=5ojnJVYDO8Y9FkvM.

Saturday, 27 June 2020

TODAY'S NEWS




கொரோனாவை காரணம் காட்டி கடைகளை காலை 10.00 முதல் மதியம் 2.00 மணி வரை தான் வைக்கவேண்டும் என்று சொல்வதால் கடையை பூட்டி விடுவார்கள் என்ற அவசரத்தில் அனைவரும் கூட்டமாக கடைக்கு வந்து கொரோனாவையும் சேர்த்து வாங்கிச் சென்று விடுகிறார்கள்.அதற்கு பதிலாக நேரம் நிர்ணயம் செய்யாமல் கடையை பழைய முறையில் வைத்தால் கூட்டம் ஒரே நேரத்தில் வராமல் விரும்பம் போல வந்து வாங்கிச் செல்வார்கள் என்பது கடைக்காரர்கள் கருத்து.
👉(உதாரணமாக மண்டபத்தில் மதிய விருந்து 11.00 to 3.00 என்றால் விருப்பம் போல அவசரமில்லாமல் வந்து சாப்பிட்டு செல்வார்கள் அதற்கு பதிலாக மதியம் 1.00 to 2.00 என்றால் மொத்த கூட்டமும் ஒரே நேரத்திற்கு வந்து விடுவார்கள் என்பது மாதிரி என கடைக்காரர்களின் கருத்தாகும்.)

🔥🔥
தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கரோனா வைரஸ் எதிர்ப்பு ஊசி மருந்தான ரெம்டெசிவிர் அனுப்பப்பட்டுள்ளது.

🔥🔥
ஆன்லைன் வகுப்பின்போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால், அது தொடர்பாக மனுதாரர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்.

🔥🔥
திருச்சி முக்கொம்பில் கட்டப்படும் புதிய கதவணை பணியை முதல்வர் பழனிசாமி நேற்று ஆய்வு செய்யதார்.

🔥🔥
விண்வெளித் துறையில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பிற்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசின் நடவடிக்கையை, 'இஸ்ரோ' தலைவர் சிவன் வரவேற்றுள்ளார்.
🔥🔥
சாத்தான்குளத்தில் 2 வியாபாரிகள் இறந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய வழக்குகளை தவிர்த்து, விசாரணை கைதிகளிடம் கடினமாக நடந்து கொள்ள வேண்டாம். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டாம் என்று போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார்.

🔥🔥
ரஷ்யாவில் விளாடிமிர் புடினை வாழ்நாள் முழுவதும் அதிபராக நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சீர்த்திருத்த சட்டத்தை கொண்டு வருவதற்கு, பொதுமக்கள் வாக்கெடுப்பு தொடங்கியது.

🔥🔥
இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்னையால் பதற்றம் அதிகரிப்பது மிகவும் கவலை அளிக்கிறது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

🔥🔥
ஐ.நா. பொதுச் சபையால் தோற்றுவிக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு  கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது.                                                           🔥🔥
அனைத்து மாவட்டங்களிலும் IFHRMS முறையில் ஊதியப் பட்டியல் தயார் செய்வது சார்பாக விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
 
🔥🔥
சென்னையில் கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். 

🔥🔥
மும்பை மாணவிகள் தமிழக முதல்வருக்கு உருக்கமான கடிதம். 
தமிழ்நாட்டில் அறிவித்ததைப் போலவே மும்பையில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்களாகிய எங்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். 

🔥🔥
ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் புகார் அளிக்கலாம் என்று உயர்நீமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தரப்பில் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
🔥🔥
புதிய கல்வி கொள்கை அமலுக்கு வர உள்ளதால், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களில் மாற்றம் செய்வதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

🔥🔥
தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வருகிற திங்கட்கிழமை மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

🔥🔥
கொரோனா பரவலால் தமிழக அரசுக்கு 35 ஆயிரம் கோடி வருவாய் பாதிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

🔥🔥
கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக சமூக வலைதளத்தில் பரவிய செய்திகள் போலி என்று உறுதி ஆகி உள்ளது. நாங்கள் அனைத்து விதிகளையும் பின்பற்றிதான் செயல்படுகிறோம். இதில் முறைகேடு எதுவும் இல்லை, என்று கூகுள் பே நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது.

🔥🔥
நிலக்கரிச் சுரங்கத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.

🔥🔥
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டுமென மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் நேரடியாக கொரோனா பாதித்த பகுதிகளுக்கு சென்று, தொற்றின் நிலவரம் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அவ்வாறு கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

🔥🔥
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

🔥🔥
உலகளவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,903,777 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 496,796 பேர் உயிரிழந்த நிலையில் 5,357,154 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,643 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

🔥🔥
அமெரிக்கா, பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

🔥🔥
டெல்லியில் பள்ளிகள் பள்ளிகள் திறப்பு: ஜூலை 31-ம் தேதி வரை தள்ளி வைப்பு.

🔥🔥
கரோனா ஊரடங்கால் குழந்தைகளின் கற்றல் பாதிப்பு; ‘சிட்டுக்கள் மையம்’ முன்வைக்கும் மாற்று கல்வி வழிமுறைகள்: தமிழக அரசு பரிசீலிக்குமாறு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்.


🔥🔥
அக விலைப்படியை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம்: ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு.

🔥🔥
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து.                                                                                         முந்தை தேர்வுகள் அடிப்படையில் பட்டம்: மகாராஷ்டிரா அரசு உத்தரவு.

🔥🔥
பிற மாநில தமிழா் பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சியை அறிவிக்க வேண்டும்: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்.

🔥🔥
பாடத் திட்டங்களைக் குறைக்க அரசு அமைத்த குழுவில் தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்ட புதிய குழுவை அரசு அமைக்க கோரிக்கை. 

🔥🔥
லேசான அல்லது மிதமான வண்ணப் பார்வை குறைபாடு கொண்டவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது:
கடுமையான வண்ண பார்வை குறைபாடு உடையவர்கள் வாகனம் ஓட்டுவதை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. மாற்று திறனாளிகள் போக்குவரத்து குறித்த சேவைகள் பெறவும், ஓட்டுநர் உரிமையத்தை பெற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
🔥🔥
மதுரை, தேனியில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 ஆம் தேதி வரை கால அவகாசம்
கட்டணம் செலுத்த கடைசி தேதி எதுவாக இருப்பினும் ஜூலை 15 வரை மின் இணைப்பு துண்டிக்கப்படாது
- மின்வாரியம். 

🔥🔥
சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதியில்லை” சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

🔥🔥
காவலர்களுக்கு FACE SHIELD எனப்படும் முழு முகக்கவசம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
காவலர்கள் முழு முகக்கவசம் அணிவதை அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் உறுதிப்படுத்தவும் ஆணை.

🔥🔥
காவல்துறையினர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர், போதிய மனநல ஆலோசனை வழங்க டிஜிபி பரிசீலனை செய்ய வேண்டும்
கோவில்பட்டி சிறையில் மற்றொரு கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சாத்தான்குளம் சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
-உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்.

🔥🔥டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை
ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் என மொத்தம் 3,000 கடைகளில் 6000 கேமராக்கள் பொருத்த அனுமதி
எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மண்டல வாரியாக அறிக்கை அளிக்க மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
அதிக விற்பனை நடக்கும் கடைகள், திருட்டு சம்பவங்கள் நடந்த கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் கேமராக்கள் அமைக்க முடிவு.

🔥🔥சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜெயராஜின் குடும்பத்திற்கு திமுக சார்பில்  ரூ.25 லட்சம் நிவாரணம்- திமுக தலைவர்  ஸ்டாலின் அறிவிப்பு
நீதிக்கான போராட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும் என ஸ்டாலின் உறுதி

🔥🔥சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

🔥🔥காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று
- உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

🔥🔥கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.
👉தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு.
👉அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1956 பேருக்கு கொரோனா பாதிப்பு. 
 👉தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74622 ஆக உயர்வு.
👉சென்னையில் மட்டும்  கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 49690 ஆக உயர்வு.
👉நேற்று ஒரே நாளில் தமிழகத்தில்  கொரோனாவுக்கு 46 பேர் உயிரிழப்பு.
👉நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சென்னையில் மட்டும்  36 பேர் உயிரிழப்பு.
👉இதுவரை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 957
👉இதுவரை சென்னையில் கொரோனா உயிரிழப்பு 730.

No comments:

QR CODE GENARETOR

Special TET Class by SCERT On 08/05/2026

Child devlopment and Pedagogy SCERT CLASS ON 08/06/2026 ஊடகப்பிரிவு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

Nmms class

https://linktr.ee/solliadi