பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு யாரையும் தேர்வு எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை தேர்வு வேண்டுமென்பதும் நம்முடைய நிலைப்பாடு அல்ல
லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பணியில் இருப்பவர்கள் பணியில் இல்லாதவர்கள் தகுதி தேர்வு எழுத விண்ணப்பிக்கிறார்கள்
விண்ணப்பிப்பவர்கள் இணையதளம் முடங்கியதால் கால அவகாசம் கேட்கிறார்கள். அதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம்
யாரையும் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக இந்த கோரிக்கை வைக்கவில்லை.
கோரிக்கையை தெளிவாக படித்து புரிந்து கொள்ளுங்கள் கோரிக்கையை தவறாக புரிந்து கொண்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்
தமிழ்நாட்டுக்கான பிரச்சனை இல்ல அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய அரசு பள்ளி /அரசு உதவி பெறும் பள்ளி/ மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களின் பிரச்சினை
அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்
பணியில் இருக்கும் எந்த ஒரு ஆசிரியருக்கு கூட கடுகளவு பாதிப்பு ஏற்படாது இதை அரசும் அமைச்சரும் தெளிவாக தெரிவித்துள்ளார்கள்
இது சட்ட ரீதியான பிரச்சனை உச்ச நீதிமன்றம் அமர்வு அளித்துள்ள தீர்ப்பு அதை சட்டரீதியாக நுணுக்கமாக அணுக வேண்டியுள்ளது. அவரவர் விருப்பத்திற்கும் அவரவருடைய எண்ணத்திற்கு ஏற்ப செயல்பட இயலாது
ஆகவே அதை புரிந்து கொண்டு செயல்படுவது தான் சரியாக இருக்கும்
வாட்ஸ் அப்பில் வரக்கூடிய செய்திகளை பார்த்து ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்குவதும் அனைவரையும் பாதுகாப்பதுவுமே இயக்கத்தின் கடமை
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment